அசோகா செய்வது எப்படி?

என்னென்ன தேவை?

கோதுமை மாவு – 100 கிராம்,
பாசிப் பருப்பு – 1/2 கப்,
நெய் – 100 கிராம்,
சர்க்கரை – 200 கிராம்,
முந்திரி, ஏலக்காய் தூள், ஃபுட் கலர் பவுடர் (சிவப்பு) – சிறிது.

எப்படிச் செய்வது?

கடாயில் நெய் சிறிது விட்டுக் காய்ந்ததும் கோதுமை மாவைப் போட்டு நன்றாக வாசனை வரும் வரை வறுக்கவும். ரொம்ப சிவக்க கூடாது. பாசிப் பருப்பை குழைய வேக வைக்கவும். வறுத்த கோதுமை மாவில் வேக வைத்த பாசிப் பருப்பைப் போட்டு அடிப்பிடிக்காமல் கிளறவும். மாவு வெந்ததும் சர்க்கரை போட்டு, நெய்விட்டுக் கிளறி, ஃபுட் கலர் சேர்த்துக் கிளறி இறக்கவும். ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி தூவி பரிமாறவும்.

Source: Dinakaran

This Post Has 0 Comments

Leave A Reply