ஊரை பற்றி

அன்பார்ந்த இராஜகிரி வாசகர்களே, அஸ்ஸலாமு அழைக்கும்!!

 

இராஜகிரி இணையதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது!!

 

இராஜகிரி:

 

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு ஊராட்சி ஆகும்.

 

இந்திய சென்சஸ் படி இராஜகிரியின் மக்கள் தொகை இருபது ஆயிரத்திற்கும் மேல். இதில் ஆண்கள் 50%, பெண்கள் 50% ஆகும். இவற்றில் எழுத்தறிவு பெற்றவர்கள் 85% – ஆண்கள் 82%, பெண்கள் 70% ஆகும்.

 

இங்கு வணக்கஸ்த்தலங்கள், விளையாட்டுத்தளங்கள், மழலையர் பள்ளிகள், உயர்நிலை பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள், ஆசிரியர் பயிற்ச்சிப் பள்ளிகள், தொழில் நுட்பக்கூடங்கள், கணிணி பயிற்ச்சிக் கூடங்கள், டிஜிட்டல் தொழில்நுட்ப நிறுவனங்கள், மருந்தகங்கள், ஜவுளிக் கூடங்கள், வங்கிகள் ஆகியன உள்ளடக்கியது.

 

எங்கள் ஊர் வரலாற்று, ஜாம்பாவன்கள், தொழிலதிபர்கள், சாதனையாளார்கள், முதுநிலை பட்டதாரிகள், இளநிலை பட்டதாரிகள், பேராசியர்கள், கல்வியாளர்கள், ஆராய்சியாளர்கள், ஆட்சியாளர்கள், சமூகசேவகர்கள், பல் துறை பொறியாளர்கள், தொழில் வல்லுநர்கள், பல துறை மருத்துவ வல்லுனர்கள், விளையாட்டு வீரர்கள், மாவட்ட மற்றும் மாநில அளவில் சாதனை செய்யும் மாணவர்கள் மற்றும் மாணவிகள், பல உயர்ந்த மனிதர்களை இவ் உலகுக்கு தந்த ஊர் எங்கள் ஊர்.

 

இன்னும், பற்பல சாதனைகளை இவ்வூர் மக்கள் நிகழ்த்திட ஏக இறைவன் நல் அருள்புரிவானாக.

 

இராஜகிரி மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடும் செயல்படும் வண்ணம் இந்தத் தளத்தினை துவங்கியுள்ளோம்.

 

இங்கு நமது இராஜகிரி சம்பந்தப்பட்ட செய்திகள் மற்றும் அனைத்து பயனுள்ள செய்திகளை அவ்வப்போது பதியப்படும்.

 

நிகழ்ச்சிகள் பற்றி எமக்கு புகைப்படத்துடன் செய்திகளை info@rajaghiri.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பினால் இங்கு பதிவு செய்யப்படும்.

 

அனுப்பப்படும் செய்திகள், தகவல்கள் யாரையும் புண்படுத்தாது இருத்தல் வேண்டும்.

 

மீண்டும் மீண்டும் வருகை தருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

 

உங்களது கருத்துகளையும்ஆலோசனைகளையும் எழுதவும்.

 

தன்னார்வத்துடன் செய்திகளை அனுப்ப விரும்புவோர் நமது சிறப்புச் செய்தியாளர்களாக பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்படுவர்.

 

விளம்பரம் மற்றும் இதர விவரங்களுக்கு info@rajaghiri.com எனும் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.

 

1. மார்க்க கல்வி – உலக கல்வி விழுப்புணர்வு :

நமதூர் மக்களிடத்தில் மார்க்க பிரச்சார சொற்பொழிவு, பெண்களுக்கான மார்க்க சமந்தப்பட்ட பிரச்சார சொற்பொழிவு ,குரான் மற்றும் ஹதீஸ் சொற்பொழிவுகள் போன்ற திட்டகளுக்கும், உலக கல்வி சமந்தமான மேற்படிப்பு ஆலோசனைக்கும் வேலைவாய்ப்பு தகவல் மற்றும் ஆலோசனைக்கும் மற்றும் சட்ட உரிமைகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.

 

2. கல்வி உதவிகள் :

நமதூர் மாணவ மாணவிகள் பலர் தகுதி இருந்தும் படிக்க வசதியற்றவர்களுக்கு நிதி உதவி அளிப்பது. மேற்படிப்பிற்கு சிறந்த ஆசிரியர்கள். கல்வியாளர்களை கொண்டும் கலந்துரையாடல், கல்வி வழிகாட்டி முகாம்கள் போன்ற நிகழ்ச்சிகள் பெற்றோர்களுக்கும் கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.

 

3. வேலைவாய்ப்பு :

நமதூரில் இருந்து வேலை தேடி வெளிநாடு வரும் நண்பர்களுக்கு நமதூர் நண்பர்களுக்கு தெரியபடுத்தி தகுதியான வேலை கிடைக்க முயற்சி செய்வது.

 

4. பசுமை திட்டம் :

சுற்று சுழல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி சுகாதாரம் மற்றும் கிராமத்தை பசுமையான சுழலை ஏற்படுத்துவது.

 

மேற்கண்ட நற்பணிகள் செய்வதாய் இராஜகிரி நண்பர்களால் தீர்மானிக்கபட்டது. நம் ஊர் வளர்ச்சிக்கு சேவையாற்ற இந்த வாய்ப்பை வழங்கிய வல்ல இறைவனுக்கு நன்றி-ஐ செலுத்துவோம்.மேலும் நம் ஊர் சகோதரர்களுக்கும் இந்த ஹிதாயத் கிடைக்க இறைவனிடம் துவா செய்வோம்.

 

உருவாக்கம்:

niyasஎன்.நியாசுதின் (Niyasuthin),
இராஜகிரி.

 

அப்துல் காதர் (Abdul Kader),
இராஜகிரி.

முஹம்மது சுல்தான் (Mohamed Sulthan),
இராஜகிரி.

மற்றும் இராஜகிரி நண்பர்கள்.

 

மின் அஞ்சல்: info@rajaghiri.com
மின் இணையம்: http://www.rajaghiri.com

 

 

 

This Post Has 0 Comments

Leave A Reply


Dictionary
  • dictionary
  • English Dictionary

Double click on any word on the page or type a word:

Powered by dictionarist.com