என்ன தலைப்பு சொல்லலாம். 1

அஸ்ஸலாமு அலைக்கும்.

ஒரு பள்ளி கூடமோ அல்லது கல்லூரியோ இருப்பின் ஆசிரியர்களின் பணி எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆசிரியர்களின் பங்கானது மாணர்வர்களை சிறந்தவர்களாக உருவாக்குவதில் உள்ளது.

சிலர் கூறுவார்கள் மாணவர்கள கடமை உணர்வோடு படிக்க வேண்டும் என்று. இன்னும் சிலர் ஆசிரியர்கள் பயிற்ருவிக்கும் கடமை செய்ய வேண்டும் என்று. நிச்சயம் இங்கு எவருக்கும் கடமை என்பதே தேவை இல்லாதது.

மாணவர்களுக்கும் படித்து பல விசயங்களை தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் இருக்க வேண்டும். அந்த ஆர்வத்தை கொண்டு வருவது ஒவ்வொரு ஆசிரியரின் திறமை. இங்கு கடமை என்ற ஒன்று யாருக்கும் பொருந்தாது. இங்கு ஆர்வமும், திறமையும் தான் முக்கிய பங்காக இருக்க வேண்டும்.

ஒரு வகுப்பறையில் 50 மாணவர்கள் படிக்கிறார்கள் என்றால், அந்த 50 மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான ஆர்வம் இருக்குமா என்றால் நிச்சயம் இருக்காது. ஒவ்வொருத்தருக்கும் ஒரு தனித்துவம் இருக்கும். அந்த தனித்துவத்தை எந்த ஆசிரியரால் கண்டுபிடிக்க முடியவில்லையோ அவர் ஆசிரியர் என்ற பணிக்கே தகுதி இழந்தவர் ஆகிறார்.

இவ்வாறு தகுதி இழந்த ஆசிரியர்கள் மாணவர்களிடம் எதிர் பார்ப்பது தாங்கள் எதை சொன்னாலும் மாணவர்கள் கேட்க வேண்டும் என்பதே! கேட்காத பட்ச்சத்தில் கண்டிப்பு என்ற பெயரில் அடித்து தங்களுக்கு அடிமை ஆக்கி விடுவார்கள்.

என்னை பொறுத்தவரை கண்டிப்பதற்கு தகுதியற்றவர்கள் ஆசிரியர்கள் என்பேன். உலகத்திலேயே கண்டிப்பதற்கு தகுதியானவர்கள் பெற்றோர்களே!

எந்த ஆசிரியர்களால் மாணவர்களின் திறமைகளை அறிய முடிகிறதோ, அவர்களுக்கு கண்டிப்பு என்ற ஒன்று அவசியம் இருக்காது. ஒரு வீடியோவில் மாணவன் ஒருவன் கேட்பான், எனக்கு அறிவியல் நன்றாக வரும் அதில் 100 மதிப்பெண் எடுக்கிறேன். அந்த சார் என்ன புத்திசாலி என்கிறார். எனக்கு ஆங்கிலம் சரியாக வரவில்லை அதில் ஃபெயில் ஆகி விடுகிறேன். அந்த சார் என்னை முட்டாள் என்கிறார். இப்போ நான் புத்திசாலியா? முட்டாளா? என்று கேட்பான்.

– yenadhumarkkam

This Post Has 0 Comments

Leave A Reply