ஒவ்வொரு வயதிலும் ஏற்படும் முதிர்ச்சி படிகள் (பெற்றோர்கள் அறிந்து கொள்ள வேண்டியது)

ஒரு குழந்தை, எப்போது நடக்கும் , தவழும் , பேசும் , போன்ற எதிர்பார்ப்பு குழந்தை பிறக்கும் போதே பெற்றோருக்கும் பிறது விடும்.

உண்மையில் ஒரு குழந்தையின் வளர்ச்சியானது ஒரு படிமுறையாக கட்டமைக்கப் பட்டதாகும். குறிப்பிட்ட காலத்தில்தான் ( வயதில்) குறிப்பிட்ட செய்முறைகளை செய்வதற்குரிய ஆற்றல் அந்தக் குழந்தைக்கு உருவாகும்.இவ்வாறு ஒவ்வொரு வயதிலும் ஒரு குழந்தை அடைய வேண்டிய ஆற்றல் அந்த வயதிற்குரிய வளர்ச்சி எல்லை (mile stone ) எனப்படுகிறது.

அதாவது ஒரு எட்டு மாதக் குழந்தையின் வளர்ச்சி எல்லையானது (mile stone) தாவழப் தொடங்குதல் .

இவ்வாறு மனிதனின் வளர்ச்சி எல்லை நான்கு முக்கிய பிரிவுகளில் நடைபெறுகிறது.

 1. அசைவு சம்பந்தமான வளர்ச்சி (தவழுதல், நடத்தல், ஊடுதல்)(GROSS MOTOR)
 2. சமூகத்தோடு ஐக்கியமாகும் வளர்ச்சி( சிரித்தல், கையசைத்தல், )(SOCIAL)
 3. நுணுக்கவேலைகள் மற்றும் பார்வை(FINE MOTOR)
 4. பேச்சு மற்றும் செவிப்புல வளர்ச்சி(SPEECH AND HEARING )

இந்த இடுகையில் முதலாவது பிரிவில் ஏற்படுகின்ற வளர்ச்சிப் படிமுறைகளை பார்ப்போம்.

 1. தலைய நேராக வைத்திருத்தல் (head control ) ——- 4 மாதம்
 2. குழந்தை உடம்பை சுழற்றுதல்(குப்புறப் படுத்தல்) ——- 3 – 6 மாதம்
 3. துணையாக நாம் பிடித்துக் கொள்ளும்போது இருத்தல் ——-5 மாதம்
 4. எந்தத் துணையும் இல்லாமல் இருத்தல் ——- 6மாதம்
 5. தவழுதல் ——– 8மாதம்
 6. எழுந்து நிற்றல் ——– 9மாதம்
 7. பிடித்துக் கொண்டு நடத்தல் ———10மாதம்
 8. துணையின்றி நடத்தல் ———12மாதம்
 9. ஓடுதல் ——– 15மாதம்
 10. ஒரு பந்தை உதைத்தல் ——– 24மாதம்
 11. மூன்று சக்கரங்களைக் கொண்ட வண்டியை மிதித்தல் ——–36மாதம

மூன்று மாதம் வயதுடைய குழந்தை செய்ய வேண்டியவை..

அசைவு சம்பந்தமான செயற்பாடுகள்

 • தலையை நிமிர்த்தி வைத்திருக்கும் திறன் .
 • குப்புறப் படுத்திருக்கும் போது தலை மற்றும் நெஞ்சினை உயர்த்துதல
 • அசையும் பொருள் அல்லது நபர்களை தொடர்ச்சியாக பார்த்தல்

உணர்ச்சி மற்றும் சிந்தனை சம்பந்தமானவை

 • ஒலி வரும் திசையை நோக்கி தலையைத் திருப்புதல்
 • நீங்கள் ஒலி எழுப்பி விளையாட்டுக் காட்டுவதை உணர்ந்து ரசித்தல்
 • நீங்கள் சிரிக்கும் போது பதிலுக்குச் சிரித்தல்

ஆறு மாதக் குழந்தையின் திறன்கள்

அசைவு சம்பந்தமானவை

 • இருத்தி வைக்கும் போது தலையை நேராக வைத்திருத்தல்
 • தூரத்தில் இருக்கும் விளையாட்டுப் பொருட்களை எட்டிப் பிடித்தல்
 • சூப்பிப் போத்தலைப் பிடித்து பால் குடிக்க முயற்சித்தல்
 • விளையாட்டுப் பொருட்களை ஒரு கையில் இருந்து இன்னொரு கைக்கு மாற்றுதல்
 • தானாக எழுந்து இருத்தல் உடம்பை உருட்டிக் கொண்டே அசைதல்

உணர்ச்சி மற்றும் எண்ணம் சம்பந்தமானவை

 • சாப்படைக் கொடு போகும் போது வாயைத் திறத்தல்
 • மற்றவர்கள் செய்யும் சிறிய செயல்களை திருப்பிச் செய்ய முயற்சித்தல்

பேச்சு

 • நெருக்கமானவர்களின் முகங்களை அறிந்து கொள்ளுதல்
 • தொந்ததரவுக்கு உள்ளாகும் போது அழுதல்
 • கண்ணாடியில் தன் முகத்தையே பார்த்து சிரித்தல்

ஒரு வயதுடைய குழந்தையின் திறன்கள்

அசைவு சம்பந்தப்பட்டது

 • சூப்பியில் இருந்து கோப்பையினால் குடிக்கப் பழகுதல்
 • சிறிய உணவுத்துண்டுகளை தானாகவே எடுத்து வாயில் வைத்துச் சாப்பிடுதல்
 • துணையின்றி சில அடிகள் நடத்தல்

உணர்ச்சி சம்பந்த பட்டவை

 • மற்றவர்கள் செய்யும் செயற்பாடுகளை தானும் செய்ய முயற்சித்தல்
 • இசையை கேட்டு சிறிய உடல் அசைவுகளைக் காண்பித்தல்
 • தூரத்தில் உள்ள விளையாட்டுப் பொருட்களை தேடித் போய் விளையாட முயற்சித்தல்

பேச்சு

 • அம்மா அப்பா தவிர்ந்த வேறு ஒரு வார்த்தையை பேசத் தொடங்குதல்
 • வீட்டில் உள்ள மற்றவர்களின் பெயர்களை அறிந்து கொள்ளுதல்
 • மற்றவர்களோடு பேச முயற்சித்தல்
 • வீட்டில் உள்ளவர்களோடு நெருக்கமாகப் பழகி வெளியாட்களோடு அன்னியத்தைக் காண்பித்தல்
 • பெரியவர்கள் சொல்லும் சிறிய சிறிய கட்டளைகளை உணர்ந்து கொள்ளுதல்

This Post Has 0 Comments

Leave A Reply


Dictionary
 • dictionary
 • English Dictionary

Double click on any word on the page or type a word:

Powered by dictionarist.com