குட்டீஸ்களுக்கு யூனிவர்செல் நடத்தும் தனித்திறன் போட்டிகள்

செல்போன் சில்லரை விற்பனை நிறுவனங்களின் ஒன்றான யூனிவர்செல் நிறுவனம் ‘பேட்டில் ஆப் சூப்பர் கிட்ஸ்‘ என்ற தலைப்பில் 5 முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கோடைகால முகாம்கள் நடத்திவருகிறது. இதில் வினாடி வினா, விளையாட்டு, விடுகதை, என பல்வேறு பிரிவுகளில் குழந்தைகளின் தனித்திறன்களுக்கு ஏற்றார்போல் போட்டிகளில் பங்கேற்கலாம்.ஒவ்வொரு நாளும் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

அவர்கள் முகாமின் கடைசி நாளன்று நடைபெறும் இறுதி போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர். இறுதி சுற்றில் வெற்றிபெறும் குழந்தைகளுக்கு டேப்லெட் மற்றும் யூனிவர்செல்லின் ஏனைய பரிசுகளும் வழங்கப்படும். இந்த போட்டிகளில் கலந்துகொள்ள உங்கள் குழந்தைகளின் பெயர்களை பதிவு செய்ய உங்கள் அருகில் உள்ள யூனிவர்செல் ஷோருமுக்கு சென்று அங்கு வழங்கப்படும் படிவத்தை பூர்த்தி செய்து தரவேண்டும். போட்டிகள் காலை 11.30 மணி வரையும் மதியம் 12.30 மணி முதல் 1.30 மணி வரையும் நடைபெறும். என்ன குட்டீஸ் போட்டிக்கு தயாரா?

Source: Dinakaran

This Post Has 0 Comments

Leave A Reply