குழந்தைக்கு முழுமையான உடல் மசாஜ் தருவது எப்படி…?

மசாஜ் என்பது உங்கள் குழந்தை மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பையும் அக்கறையையும் காதலோடு எடுத்துச் சொல்லும் வழியாகும். குழந்தை மட்டுமல்லாது நீங்களும் அதனால் அமைதி பெறுவீர்கள். ஒத்திசைவோடு, மென்மையான மற்றும் அமைதிப்படுத்தும் வகையில் செய்யப்படும் மசாஜ், உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் நல்ல உணர்வுகளை உண்டாக்கும் ஹார்மோன்களின் உற்பத்தியை ஊக்குவிக்க உதவும்.

உங்கள் இருவர் போக, உங்கள் கணவன் இதை பார்த்துக் கொண்டிருந்தால் அவரும் அந்த உணர்வை உணரலாம். மசாஜ் செய்யும் போது குழந்தையின் நோய் தடுப்பாற்றல் அமைப்பு மேம்பட்டு, அமைதியை உண்டாக்கி, உங்களுக்கும் குழந்தைக்கும் இடையேயான பந்தம் வலுபெறும்.

பல தாய்மார்கள் பயப்படுவதை போல் குழந்தைக்கு மசாஜ் செய்வது என்றால் பெரிய காரியம் அல்ல. அதற்கு சில எளிய வழிமுறைகள் உள்ளது. அப்படிப்பட்ட ஒரு 10 வழிகளை உங்களுக்காக நாங்கள் விளக்கியுள்ளோம்.

கால்கள்

குழந்தையின் கால்களில் இருந்து மசாஜை தொடங்குங்கள். அதற்கு காரணம், மற்ற உறுப்புகளுடன் ஒப்பிடுகையில், கால்கள் குறைந்த கூச்சமுடைய பகுதியாகும். உங்கள் இரண்டு கைகளும் எண்ணெய்யை தடவி, குழந்தையின் தொடை பகுதியை கைகளால் மூடிக்கொள்ளுங்கள். பின் ஒரு கை மாற்றி மற்றொன்றாக குழந்தையின் கால் முழுவதும் மென்மையாக நீவி விடுக.ஒரு கால் மாற்றி மற்றொன்றாக இதனை தொடர்ந்து செய்யவும்.

பாதங்கள்

ஒரு பாதத்தை உங்கள் கைகளில் எடுத்து ஒவ்வொரு திசையிலும் அதனை மெதுவாக திருப்பவும். இதனை 4-5 நிமிடங்கள் வரை செய்யவும்.பின் கணுக்காலில் இருந்து நுனிப்பாதம் வரை நீவி விடவும். பின் இதையே மற்றொரு பாதத்திற்கும் செய்யவும்.

உள்ளங்கால்

உங்கள் பெருவிரல்களால், குழந்தையின் உள்ளங்காலில் வட்ட வடிவில் மசாஜ் செய்யவும்.

நுனிப்பாதம்

குழந்தையின் ஒவ்வொரு நுனிப்பாதத்தையும் உங்கள் முன் விரல்கள் மற்றும் பெருவிரலுக்கு மத்தியில் வைத்து, உங்கள் விரல்களை நுனிப்பாதங்களின் மீது மென்மையாக நீவி விடவும். இரண்டு கால்களிலும் இதனை செய்யவும்.

கரங்கள்

குழந்தையின் ஒரு கரத்தை கையில் எடுத்துக் கொள்ளுங்கள். பின் குழந்தையின் அக்குள் முதல் மணிக்கட்டு வரை மில்கிங் மோஷன் முறையில் தடவி விடவும். அதன் பின், மென்மையான முறையில், குழந்தையின் கரங்களை ஒவ்வொரு திசையிலும் 4-5 நிமிடங்களா வரை திருப்பவும். பின் கையை மாற்றி இதனை தொடரவும். கைகள் உங்கள் பெருவிரல்களை வைத்து குழந்தையின் இரு உள்ளங்கையில் வட்ட வடிவில் மசாஜ் செய்யவும்.

விரல்கள்

இரண்டு கைகளின் விரல்களையும் மெதுவாக எடுத்து உங்களின் முன் விரல்கள் மற்றும் பெருவிரலுக்கு மத்தியில் வைத்து, மென்மையாக நீவி விடுங்கள். அப்படி செய்யும் போது அவைகள் உங்கள் கைகளை விட்டு வழுக்கி விட வேண்டும்.

முகம் மற்றும் தலை

குழந்தையின் தலை பின்புறத்தை உங்கள் கைகளால் பிடித்துக் கொள்ளுங்கள். பின் தலைச்சருமத்தில் உங்கள் விரல் நுனிகளை கொண்டு மென்மையாக வருடி விடுங்கள். அதன் பின், அதன் புருவங்கள், மூடிய கண்கள் மற்றும் கன்னங்களை கடந்து செல்லும் மூக்கின் பாலம் ஆகிய இடங்களில் நீவி விடவும். அதன் பின் குழந்தையின் காது மடல்கள் மற்றும் தாடைகளை வட்ட வடிவில் மென்மையாக தடவிக் கொடுக்கவும்.

நெஞ்சு
உங்கள் கைகளை வணங்கும் நிலையில் வைத்து குழந்தையின் இதயம் இருக்கும் பகுதியின் மேல் வைக்கவும் இப்போது மூடிய கைகளை மெதுவாக திறந்து, குழந்தையின் நெஞ்சின் மீது மிதமான முறையில் தடவி விடவும். இதனை பல தடவை செய்யவும்.

பின்புறம்
பின்புறம் மசாஜ் செய்ய குழந்தையை குப்புற படுக்க போடவும். பின் உங்கள் விரல்களை கொண்டு குழந்தையின் கழுத்து முதல் அடிபாகம் வரை (முதுகெலும்பின் இருபக்கமும்) நீவி விடவும்.

Source: boldsky

This Post Has 0 Comments

Leave A Reply