துபாயின் போஸ் ஜூமைரா கடற்கரை குடியிருப்பு மாவட்டத்தில் சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளின் வாடகை கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டுச் சுமார்15% சரிந்துள்ளது. வளம் நிறைந்த அமீரகத்தின் பொருளாதார வெற்றியில் ஏற்பட்ட தேக்கநிலையின் குறியீடாக இதைச் சற்று பயத்துடன் பார்க்க வேண்டியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக, துபாய் உலகின் சர்வதேச நகரங்களில் ஒன்றாகவும், மக்களை அதிகம் கவரும் நகரமாகவும், உலக நாடுகளுக்கெல்லாம் தலைநகராகவும் முன்னேறி வந்தது.

மற்றொரு கடினமான சூழலை சந்திக்கப்போகும் துபாய்
ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு, சரிந்து வந்த சொத்து மதிப்பினால் ஏற்பட்ட கடன் நெருக்கடியில் இருந்து தப்பிக்க, துபாய்க்கு எண்ணெய் வளம் மிக்க அபுதாபியில் இருந்து பிணை தொகையாக 20பில்லியன் டாலர் தேவைப்பட்டது. அதற்குப் பின்னர்த் துபாயின் பொருளாதாரம் வீறுநடைபோட்டு, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக வளர்ந்து, வெளிநாட்டு வர்த்தகம், சுற்றுலா மற்றும் அதன் தகுதி எனத் தொழில் சேவைகளுக்கு முக்கியப் பிராந்திய மையமாகத் திகழ்ந்தது. தற்போது துபாய் மற்றொரு கடினமான சூழலை சந்திக்கப்போகிறது. 2014-க்கு பிறகு குடியிருப்பு சொத்துக்களின் மதிப்பு 15 % குறைந்து, தொடர்ந்து சரிந்துகொண்டே உள்ளது. இந்த ஆண்டில் மட்டும் பங்குச்சந்தை 13% குறைந்துள்ளது. இது தான் அந்தப் பகுதியான மிக மோசமான பங்குச்சந்தை செயல்பாடு.

தற்காலிகமான சரிவு?
2018ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் சுமார் 4,722புதிய தொழில் உரிமங்களைத் தந்துள்ளது துபாய். ஆனால் இதே காலகட்டத்தில் அதிகப் புதிய உரிமம் வழங்கிய ஆண்டான 2016ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, இது 26% குறைத்துள்ளது.இந்த வீழ்ச்சி தற்காலிகமானதாக இருந்தாலும், வளைகுடா நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலைக்குக் காரணம் குறைந்த எண்ணெய் விலை தான். ஆனால் மற்ற குறியீடுகளை வைத்துப்பார்த்தால், துபாயின் வளர்ச்சிக்குப் பாரம்பரியமாகப் பங்காற்றியவை தற்போது வீழ்ச்சியடையத் துவங்கியதால், இது நீண்ட காலச் சரிவாக இருக்கப்போகிறது.

பயண மையமான துபாயின் ஆதிக்கம் குறைகிறதா?
துபாய் சர்வதேச விமானநிலையத்தின் வழியாக நடைபெற்று வந்த பயணிகள் போக்குவரத்து, கடந்த 15 வருடங்களாகத் தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இந்தாண்டு பூஜ்ஜியமாகச் சரிந்துள்ளது. ஆசியா மற்றும் ஐரோப்பியாவை இணைக்கும் பயண மையமாகத் திகழும் துபாய், நீண்டதூர விமானங்களின் மீதான தனது ஆதிக்கத்தை அதிகளவில் இழந்து வருகிறது. அதிகாரப்பூர்வ தகவலின்படி, 2018ம் ஆண்டின் முதல் பாதியில் துபாயின் மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்து, 3.5% அதிகரித்து 3.08 மில்லியனாக உள்ளது. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் பெரும்பாலான வளர்ச்சி என்பது குறைந்த சம்பளம் வாங்கும் கட்டுமானம் மற்றும் சேவை பணியிடங்களில் தான். அதிகச் சம்பளம் வாங்கும் ஒயிட்காலர் வேலை எனப்படும் உயர் பணியிடங்களில் இல்லை

நல்லுறவை பேணியதால் செழிப்பான துபாய்
கடந்த காலங்களில் துபாய், அந்தப் பகுதியில் உள்ள ஒவ்வொரு நாட்டுடனும் நல்லுறவை பேணி, அவர்களிடம் இருந்து வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஏற்றுக்கொண்டு செழிப்பாக இருந்தது. தற்போது அது சாத்தியமில்லாமல் போனது. சென்ற ஆண்டு, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா மற்றும் இதர நாடுகள் கத்தார் உடனான போக்குவரத்து மற்றும் தூதரக உறவை துண்டித்துக்கொண்டதால், அந்தச் சிறிய அதேநேரம் மிகச்செழிப்பான நாட்டுடனான வர்த்தகத்திற்கு அடிப்படையாகத் திகழ்ந்த துபாயின் பங்கு முடிவுக்கு வந்தது.

துபாயில் வெளிநாட்டு முதலீடுகள்
துபாய் தனது போட்டிக்கான நிலையை உயர்த்த முயல்கிறது. வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு உதவுவதற்காக, கடந்த சில மாதங்களாக மாநகராட்சி கட்டணத்தைக் குறைத்தல் ,சில விமானப் போக்குவரத்துக் கட்டணங்களைக் குறைத்தல், பள்ளி கட்டணங்களை நிறுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அரசாங்கம் கூறியுள்ளது.

One India.

This Post Has 0 Comments

Leave A Reply