தமிழ் எழுத்துகளின் வரிசை காணொளிக

இன்றைய சூழலில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை வெகுவாக குறைந்து வருவதை நாம் அனைவரும் அறிவோம். இதற்கு பெற்றோரின் ஆங்கில மோகம் தான் காரணம் என்பதையும் அறிவோம். இக்கால பெற்றோருக்கு ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் தான் உள்ளனர்.

ஆகவே குழந்தைகளின் தேவையை பெற்றோரால் நிறைவேற்ற முடிகிறது. ஆங்கில பயிற்றுமொழி பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதை பெற்றோர் பெருமையாகவும், குழந்தைகளின் எதிர் காலத்துக்கு ஒரு முதலீடாகவும் கருதுகின்றனர். ஆனால் அரசுப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் பெரும்பாலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்ப சூழலில் இருந்து தான் வருகின்றனர். மாணவர்களின் கல்வியில் பெற்றோரின் பங்களிப்பு என்பது மிகவும் குறைவு.

இந்த சூழ்நிலையில், கல்வித்துறை அலுவலர்களும் ஊடகங்களும் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் வாசித்தல் திறன் மிகவும் குறைவாகவே இருப்பதாக சுட்டிக் காட்டுகின்றனர். அதுவும் தாய் மொழியாம் தமிழில் வாசிப்பதிலேயே பின் தங்கிய நிலை காணப்படுவதாக கூறப்படுகிறது. தமிழில் வாசிக்க தெரியவில்லை என்பதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மிக முக்கியமான காரணங்கள் இரண்டு தான்:

1. எழுத்துகள் தெரியாததால் வாசிக்க இயலாமை
2. கற்றுக் கொண்ட எழுத்துகளை தினமும் மீள் பார்வை செய்யாமை

This Post Has 0 Comments

Leave A Reply


Dictionary
  • dictionary
  • English Dictionary

Double click on any word on the page or type a word:

Powered by dictionarist.com