தெண்டுல்கருக்கு மும்பையில் பிரமாண்ட வழியனுப்பு விழா: விசேஷ தபால்தலை– தங்க நாணயம் வெளியீடு

கிரிக்கெட் சகாப்தம் சச்சின் தெண்டுல்கர் தனது 200–வது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறுகிறார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மும்பையில் நடக்கும் டெஸ்ட் போட்டியில் விளையாடி அவர் விடை பெறுகிறார். இந்த போட்டி வருகிற 17–ந் தேதி தொடங்குகிறது.

ஓய்வு பெரும் தெண்டுல்கருக்கு பிரமாண்ட வழியனுப்பு விழா நடத்த மும்பை கிரிக்கெட் வாரியம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த போட்டியில் தங்க நாணயத்தில் டாஸ் போடவும், அந்த நாணயத்தில் சச்சின் தெண்டுல்கரின் படத்தை பொறிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தெண்டுல்கர் படத்துடன் கூடிய விசேஷ தபால்தலையும் வெளியிடப்படுகிறது. ரசிகர்களுக்கு தெண்டுல்கர் படம் பொறிக்கப்பட்ட தொப்பி, முகமூடி அளிக்கப்படுகிறது.

இதை இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் இணைந்து மும்பை கிரிக்கெட் வாரியம் செய்து வருகிறது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தெண்டுல்கர் தனது 199–வது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார். அவருக்கு பெங்கால் கிரிக்கெட் வாரியம் சார்பில் ஒரு அடி உயரமுள்ள வெள்ளியிலான மரம் நினைவு பரிசாக வழங்கப்படுகிறது. அதில் 199 வெள்ளி இலைகள் பொருத்தப்படுகிறது.

Source: malaimalar

This Post Has 0 Comments

Leave A Reply