பள்ளிகளில்,கூடாரம்,’கபன்’ துணி போன்றவற்றை வாங்கிவைத்து இலவச சேவையொன்றைச் செய்தாலென்ன ?

ஒரு ஏழை வீட்டிலோ பணக்கரர்
வீட்டிலோ எங்கென்றாலும்,மரணம்
நிகழ்ந்துவிட்டால்,”கபன்” துணி வாங்க,
“கபுரு” தோண்ட,
ஜனாஸாவைக் காண வருபவர்கள்
வெயிலுக்கோ,மழைக்கோ,அமர்ந்திருக்க,
கூடாரம் (டென்ட்) கட்டவென்று
இம்மூன்றுக்கும் மாத்திரம்,குறைந்தது
15 ரூபாவாவது செலவாகிறது.ஒரு மரண
வீட்டில் இவை மாத்திரமல்ல செலவுகள்.
என்றாலும் கண்டிப்பாகச் செய்தே
ஆகவேண்டிய இவற்றைச் செய்து
கொள்ள முடியாமல் விழி பிதுங்குவோர்
அநேகம்.
எனவே ஒவ்வொரு பள்ளிகளிலும்
ஜனாஸாவைத் தூக்கிச்செல்ல
“சந்தூக்கு” வைத்திருப்பது போல,
ஒவ்வொரு மஹல்லாவிலும்
உள்ள வசதி படைத்தவர்கள்
ஒன்றிணைந்து தத்தமது ஊர்ப்
பள்ளிகளில்,கூடாரம்,’கபன்’
துணி போன்றவற்றை வாங்கிவைத்து
இலவச சேவையொன்றைச்
செய்தாலென்ன ?

பேருவளை மருதானை யாசிர்
அரபாத் மஸ்ஜித் (பலகப் பள்ளி)
மஹல்லாவைச் சேர்ந்த சகோதரர்கள்.
இது போன்றதொரு முன்மாதிரியைச்
செய்து வருகிறார்கள்.மரணம் நிகழ்ந்த
தினத்தில் அவ்வீட்டினருக்கான
சாப்பாட்டையும் செய்து கொடுக்கிறார்கள்.
சிங்கமெனச் செயற்படுகிறார்கள்.

This Post Has 0 Comments

Leave A Reply


Dictionary
  • dictionary
  • English Dictionary

Double click on any word on the page or type a word:

Powered by dictionarist.com