19 வயதுக்குட்பட்டோர் உலககோப்பை கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி

சார்ஜா: சார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோர் இளைஞர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 245 ரன்கள் வித்தியாசத்தில் பப்புவா நியூ கினி அணியை வீழ்த்தியது. முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கபட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 301 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சாம்சன் 48 பந்துகளில் 8 பவுண்டரி, 4 சிக்சருடன் 85 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

இதனை அடுத்து 302 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பப்புவா நியூ கினி அணி 28.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 56 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. பப்புவா அணியில் அதிகபட்சமாக ஹெக்குரா 20 ரன்களும், ஹிரி 13 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். இதில் நான்கு வீரர்கள் டக் அவுட் ஆகினர். இந்திய தரப்பில் குல்திப் யாதவ் 4, மோனு குமார் 3, கூடா 2, கனி 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனால் இந்திய அணி 245 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக சஞ்சு சாம்சன் தேர்ந்தெடுக்கபட்டார். இதன் ஏ பிரிவில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது.

This Post Has 0 Comments

Leave A Reply