உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் 5 கடமைகளில் ஒன்றான புனித ஹஜ் பயணத்தை துல்ஹஜ் மாதத்தில் நிறைவேற்றுவார்கள். இதற்காக சவுதி அரேபியாவில் உள்ள மக்கா நகருக்கு புனித பயணம் செல்வார்கள். இந்த ஆண்டு தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் ஆகிய பகுதிகளில் இருந்து 3,015 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த புனித ஹஜ் பயணத்திற்கான முதல் விமானம் நேற்று மாலை 5 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து ...

புதுடில்லி : இந்தியாவில் 20 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலை இல்லாதவர்களாகவும், வேலை தேடுபவர்களாகவும் உள்ளனர் என சமீபத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. வேலையில்லாமல் தவிக்கும் 4.7 கோடி பேரில் 2.6 கோடி ஆண்களும், 2.1 கோடி பெண்களும் உள்ளனர். இவர்களில் பலர் வேலையில்லாதவர்களாகவும் அல்லது வருடத்தின் 6 மாதம் மட்டுமே வேலை செய்பவர்களாக உள்ளனர். 25 முதல் 29 வரையிலான வயதுள்ளவர்களில் 18 சதவீதம் பேரும், 30 முதல் 34 வயதுள்ளனர்களில் 6 சதவீதம் பேரும் வேலையில்லாமல் ...

சென்னை: தமிழ்நாட்டில் ஆம்னி பஸ்களின் கட்டணம் மே 1ம்தேதி முதல் உயர்த்தப்பட உள்ளது. தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் இயங்கிவருகின்றன. தற்போது விடுமுறை காலம் என்பதால் ஆம்னி பஸ்களில் கூட்டம் அதிகமாக உள்ளது, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பஸ் கட்டணத்தை உயர்த்த ஆம்னி பஸ் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். பெங்களூரிலிருந்து தமிழகத்துக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்களில் சமீபத்தில் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதை காரணமாக வைத்து தமிழகத்திலும் பஸ் கட்டண உயர்வை அமல்படுத்த முடிவு செய்துள்ளனர் ஆம்னி ...

தமிழகத்தில் கடந்த 2 நாள்களாக பெய்துவரும் கனமழைக்கு 10 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகம் மற்றும் புதுவையில் திங்கள்கிழமையும் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் நாகப்பட்டினம், கடலூர் மற்றும் புதுவை உள்ளிட்ட இடங்களில் இடைவிடாமல் கனமழை பெய்தது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாகப்பட்டினம் அருகே கரையை சனிக்கிழமை (நவம்பர் 16) கடந்தது. இதையடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருச்சி, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் ...